புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது. இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல் (வயது: 61) என்பவர் தங்கியிருந்தார். அவர், அங்கிருந்த வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவர் அங்குள்ள மாத்தூர், மண்டையூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு மாலை நேரங்களில் சென்று, கிறிஸ்தவ மதப் பாடல்களைப் பாடி மத போதனைப் பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது, மாத்தூர் விவேகானந்தர் நகரைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி செல்வி என்ற பிரின்சி (46) என்பவரிடம் அறிமுகமாகியிருக்கிறார். அவரின் கணவர் இறந்துவிட்ட நிலையில், செல்வியோடு வீராசாமிக்குத் திருமணம் மீறிய உறவு எற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் வீராசாமி, செல்வியிடம், தான் தனியாக தங்கியிருப்பதாகவும் தனக்கு சமையல் மற்றும் வீட்டு வேலை செய்வதற்கு ஆள் ஒருவர் தேவை என்றும் கூறியிருக்கிறார். அதைக்கேட்ட செல்வி, 'எனக்கும் கணவர் இல்லை. வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறேன். மத்த ஆள் எதற்கு... ந...
செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி குழுமம்... (Media - News Company) Email : News.kolathurnanban@gmail.com www.kolathurnanban.com Cell : +91 8825465551 | 044 42146943
Comments
Post a Comment