கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலை அஜ்ஜனூர் பிரிவு அருகே வடவள்ளி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பிரஸ் ஸ்டிக்கர் ஓட்டி வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.அப்போது காரில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில் பிடிப்பட்ட நபர்கள் பி.என்.புதூரை சேர்ந்த சரவணன் (38). ராமநாதபுரத்தை சேர்ந்த சூர்யா (22) என்பதும் தெரியவந்தது.
மேலும், பிடிபட்ட சரவணன் ஓட்டுநர் வேலை பார்த்து வருவதாகவும், ஆனால் காரில் பிரஸ் ஸ்டிக்கர் ஓட்டி வைத்ததுடன், ஆரம்பம் மலர் வார பத்திரிகையின் உதவி ஆசிரியர் என அடையாள அட்டையை வைத்திருந்ததும் தெரியவந்தது.இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 2.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Comments
Post a Comment