மாலை தீபம் நாளிதழ் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.
மாலை தீபம் நாளிதழ் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் நல சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120வது பிறந்த நாள் விழா திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வேம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பரிசளிப்பு மற்றும் பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்க பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்க தலைவர் எஸ். சரவணன், பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் மார்ட்டின் ஜெபராஜ் ஆகியோர் கலந்துக் கொண்டு பள்ளி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.
மாலை தீபம் நாளிதழ் ஆசிரியர் திரு.முகுந்தன் அவர்களின் தலைமையில் விழா நடைபெற்றது. தர்ம ராஜ்ஜியம் ஆசிரியர் வினோத், நீதியின் தீர்ப்பு ஆசிரியர் கிருஷ்ணவேணி, விழுதுகள் ஆசிரியர் விஜயகுமார், ஆத்திமாலை ஆசிரியர் ஜெயச்சந்திரன், பேனா முள் நிருபர் ஞானராஜ், மாலை தீபம் நாளிதழ் நிருபர்கள் உட்பட ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
Comments
Post a Comment